V4UMEDIA
HomeNewsKollywoodஹெச்.வினோத் படத்தை மறைமுகமாக உறுதி செய்த கமல்

ஹெச்.வினோத் படத்தை மறைமுகமாக உறுதி செய்த கமல்

தொடர்ந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கி வந்தார் இயக்குனர் ஹெச் வினோத். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை தொடர்ந்து அஜித் படத்தை இவர் இயக்கினாலும் அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பயணிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அஜித்தின் படங்களை இயக்கிய வகையிலேயே கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழிந்து விட்டது.

இந்த நிலையில் அடுத்ததாக தனுஷ் படத்தையும் கமல் படத்தையும் இவர் இயக்க உள்ளார் என்கிற தகவல் இவர் மூலமாகவே மீடியாக்களில் வெளியானது. அதேசமயம் எந்த படம் முதலில் ஆரம்பிக்கும் என்பது குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

காரணம் ஒரு பக்கம் கமல் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தின் நடிக்கிறார் என்றும் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹெச் வினோத்தின் டைரக்சனில் எப்போது நடிக்கப் போகிறார், ஒருவேளை அதுதான் முதல் படமாக அவர் நடிக்க இருக்கிறாரா என்பது போன்ற சந்தேகங்கள் ரசிகர்களிடம் இருந்து வந்தன.

இன்னும் சிலருக்கோ ஹெச் வினோத் டைரக்ஷனில் இவர் உண்மையிலேயே நடிக்கிறாரா என்பது கூட சந்தேகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுக்கும் முயற்சிக்கு விவசாயிகளுடன் துணை நிற்பதாக மக்கள் நீதி மையம் சார்பில் கமல்ஹாசன் ஒரு கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆச்சரியமாக காணப்பட்ட விஷயம் என்னவென்றால் அத்தனை விவசாயிகளுடன் இயக்குனர் கமலின் அருகில் அமர்ந்திருந்தார் ஹெச்.வினோத். இந்த கூட்டத்தில் இவருக்கு என்ன வேலை என்று கூட பலரும் புருவம் உயர்த்தினார்கள்.

ஒருவேளை விவசாயம் சம்பந்தப்பட்ட படமாக கூட இருக்கலாம் அதனால் இவரை கமல் அழைத்து இருப்பாரோ என்றும் சொல்லப்பட்டது. எப்படி இருந்தாலும் இயக்குனர் வினோத் டைரக்சனில் தான் நடிக்க இருப்பதை கமல் மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

Most Popular

Recent Comments