V4UMEDIA
HomeNewsKollywoodஅண்டாவ காணோம் பட தயாரிப்பாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை  

அண்டாவ காணோம் பட தயாரிப்பாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை  

தமிழ் சினிமாவில் சமீப காலமாக மட்டுமல்ல கடந்த 10 வருடங்களுக்கு மேலாகவே கதை திருட்டு என்கிற பேச்சு பரபரப்பாக அடிபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பில் சிக்கியுள்ளது தண்டட்டி என்கிற படம் இது போன்ற ஒரு சிக்கலில் சிக்கி உள்ளது.

சிங்கம் 2, சர்தார், காரி உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் நடிகர் பசுபதி நடிப்பில் தயாரித்துள்ள படம் தண்டட்டி. இயக்குனர் ராம் சங்கையா என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கிராமத்தில் ஒரு சாவு நிகழ்வின் போது கலந்து கொள்ள வந்த ஒரு பாட்டியிடம் இருந்து தண்டட்டி என்கிற காதில் அணியும் அணிகலன் ஒன்று காணாமல் போகிறது. அதை யார் திருடியது என்பதை குறித்து போலீஸ் விசாரணை நடக்கும் அளவிற்கு மிகப்பெரிய பிரச்சனை கிளம்புகிறது.

இதை மையப்படுத்திய இந்த படம் உருவாகியுள்ளது என்பதை இதன் டிரைலரை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பே நடிகை ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வேல்மதி என்பவர் இயக்கத்தில் அண்டாவ காணோம் என்கிற படம் தயாரானது.

இந்த படத்தின் பணிகள் எல்லாம் நிறைவடைந்து பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் சில காரணங்களால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தை ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் தண்டட்டி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இதை பார்த்துவிட்டு இந்த படத்தின் கதையும் தான் தயாரித்துள்ள அண்டாவ காணோம் படத்தை கதையும் ஒன்றாக இருக்குமோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது என்று ஜே எஸ் கே சதீஷ்குமார் ஒரு புகார் தெரிவித்து தண்டட்டி படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைக்குமாறு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதுமட்டுமல்ல தன்னுடைய அண்டாவ காணோம் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியாத நிலையில் பத்திரிகையாளர்களும் உண்மை நிலவரம் என்ன என தெரிந்து கொள்ளும் விதமாக இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சியையும் திரையிட்டு காட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஜே எஸ் கே சதீஷ்குமார்.

ஒருவேளை தண்டட்டி திரைப்படம் வெளியான பிறகு இரண்டு கதைகளும் ஒரே போல இருந்தால் தன்னுடைய படம் வெளியாகாத நிலையில் அது குறித்து திரையுலகில் உள்ள சங்கங்களின் மூலம் நியாயம் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற ஒரு அச்சத்தில் பத்திரிக்கையாளர்களாவது சாட்சியாக இருக்கட்டுமே என்கிற முன் யோசனையில் இப்படி ஒரு பத்திரிக்கையாளர் காட்சியை ஏற்பாடு செய்து திரையிட்டுள்ளார் ஜே எஸ் கே சதீஷ்குமார். தண்டட்டி வெளிவந்த பிறகு தான் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வரும்.

Most Popular

Recent Comments