இயக்குனர் அமீர் கடந்த சில வருடங்களாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்துவிட்டு முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வட சென்னை படத்தில் அவரது நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் உயிர் தமிழுக்கு.
ஆன்டி இண்டியன் என்கிற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஆதம் பாவா இந்த படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
வரும் பக்ரீத் பண்டிகையில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதே தேதியில் தான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது என சொல்லப்படுகிறது.
உயிர் தமிழுக்கு திரைப்படம் அரசியலை நையாண்டி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.