V4UMEDIA
HomeNewsKollywoodமிஸ்கின் சீடர் இயக்கும் படத்தை தயாரிக்கும் குஜராத் தயாரிப்பாளர்

மிஸ்கின் சீடர் இயக்கும் படத்தை தயாரிக்கும் குஜராத் தயாரிப்பாளர்

மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பார்த்திருக்கிறோம். பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து படம் தயாரிக்கும் போனி கபூர் போன்ற தயாரிப்பாளரையும் பார்த்திருக்கிறோம்.

ஆனால் குஜராத்தில் இருந்து தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என ஆர்வமுடன் ஒரு தயாரிப்பாளர் தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். முதல் முறையாக பிபி 180 (BP 180) என்கிற படத்தை தயாரிக்கிறார் தயாரிப்பாளர் அதுல்.

இயக்குனர் மிஸ்கினிடம் அஞ்சாதே படத்தில் இருந்து உதவி இயக்குனராக பணியாற்றி வரும் ஜேபி இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் கே.பாக்யராஜ், டேனியல் பாலாஜி, அருள்தாஸ், தமிழ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது, “தயாரிப்பாளர் வெளி மாநிலத்திலிருந்து வந்து முதன் முறையாகப் படமெடுக்கிறார். இயக்குநர் ஜேபி இப்படத்தில் அறிமுகமாகிறார், இந்த குழுவிற்கு என் வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் இந்தக்கதையை 40 கதைகள் கேட்டு பின் இந்தக்கதையை ஓகே செய்துள்ளார். இந்தப்படத்தில் தான்யா, டேனியல் பாலாஜி, ஜிப்ரான் மூன்று பேருக்கும் தான் நிறைய வேலை இருக்கிறது. கதை மிக திரில்லாக இருந்தது. கதை சொல்லும் போது ஒரு டைட்டில் சொன்னார் ஆனால் இப்போது வைத்திருக்கும் டைட்டில் தான் இந்தப்படத்திற்குப் பொருத்தமான டைட்டில். மிஷ்கின் பேரைக் காப்பாற்றும் வகையில் இப்படத்தை ஜேபி சிறப்பாக இயக்குவார்” என்றார்

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, “தயாரிப்பாளர் அதுல் சார், ராட்சசன் பார்த்துவிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றார். இயக்குநர் ஜேபியை என்னிடம் அனுப்பினார் அவர் கதை சொல்லச் சொல்ல, மிக அட்டகாசமாக இருந்தது. இந்தக்கதைக்குப் பொருத்தமான டைட்டில் இது தான், படம் இப்போது தான் துவங்கியுள்ளோம், முடிந்தபிறகு இன்னும் நிறையப் பேசலாம்” என்று கூறினார்.

படத்தின் இயக்குனர் ஜே பி பேசும்போது, “நான் மிஷ்கின் சாரின் மாணவன் “அஞ்சாதே” படத்திலிருந்து நான் அவருடன் பயணம் செய்துள்ளேன். ஆடியோ விழாவிற்கு வருவதாகக் கூறியுள்ளார். அவரது பெயரைக் காப்பாற்றுவேன். இந்த படத்தை பெரும் பொறுப்போடு செய்வேன். இதன் மதிப்பு எனக்குத் தெரியும்” என்று கூறினார்

Most Popular

Recent Comments