விஜய்சேதுபதி, தமிழை விட தற்போது இந்தியில் தான் அதிக படங்களில் நடித்து வருகிறார். மும்பைகார், மெர்ரி கிறிஸ்துமஸ் மற்றும் ஷாருக்கானுடன் ஜவான் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. இதில் கத்ரீனா கைப்புடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன இந்த படத்தில் ஏற்கனவே ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் குறிப்பாக நானும் ரௌடி தான் படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் அவர் இணைந்து நடிப்பதுடன் இந்த படத்திலும் அதே போன்று காவலர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்ல இந்த படத்தில் இன்னும் தமிழில் இருந்தும் தெலுங்கில் இருந்தும் கூட சில பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.