சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாக இருக்கும் படம் மாவீரன். இந்த படம் முதலில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஜெயிலர் திரைப்படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால் முன்கூட்டியே வெளியாவதாக மாற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடும் உரிமையை கைப்பற்றி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளா.ர் யோகி பாபு கதாநாயகனாக நடித்த மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பரத் சங்கர் என்பவர் இசையமைத்துள்ளார்.