V4UMEDIA
HomeNewsKollywoodமீண்டும் நடிக்க வரும் பாட்ஷாவின் தங்கை

மீண்டும் நடிக்க வரும் பாட்ஷாவின் தங்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்த, அவர்கள் குறிப்பாக அவரது நண்பர்களாக, சகோதரிகளாக, சகோதரர்களாக நடித்த அனைவருமே ரசிகர்களிடம் உடனடியாக கவனம் பெறுவார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா படத்தில் தங்கைகளாக நடித்த இருவர் யுவராணி மற்றும் செண்பகா.

அந்த படத்தில் அந்த இருவருக்கும் சரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த படம் வெளியான பிறகு அவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் ரஜினி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அப்போதைய ரசிகர்களுக்கு நன்கு தெரியும்.

இதில் யுவராணி சில நாட்கள் படங்களில் நடித்த பின்னர் தொலைக்காட்சி சீரியல் பக்கம் பார்வையை திருப்பினார். நடிகை செண்பகா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் கவனத்தை திருப்பி உள்ள செண்பகா மீண்டும் கோலிவுட்டுக்கு வருகை தருகிறார். இந்த புதிய இன்னிங்ஸில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்

Most Popular

Recent Comments