தமிழ் சினிமாவில் பழம் பெருமை வாய்ந்த, மிகப்பெரிய, அதிக எண்ணிக்கையிலான படங்களை தயாரித்த நிறுவனம் அ௩எவிஎம் புரொடக்சன்ஸ். எம்ஜிஆர், சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல் என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த நிறுவனம் தயாரித்த படங்களின் நடித்துள்ளனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் அறிமுகமானது ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா என்கிற படத்தில் தான். அதேசமயம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரை உலக பயணத்தில் முரட்டுக்காளை படத்தில் தொடங்கி சிவாஜி தி பாஸ் படம் வரை அவரை மிக உச்சத்திற்கு கொண்டு சென்றதும் ஏவி எம் நிறுவனத்தின் படங்கள் தன,
இப்படிப்பட்ட பெருமை வாயந்த, கிட்டத்தட்ட நூற்றாண்டு தொடப்போகும் இந்த நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் ஒன்றை ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் நிறுவி உள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
அவருடன் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மூத்த நடிகர் சிவகுமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த மியூசியம் ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்களாலும் முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம், எஜமான் உள்ளிட்ட பல பெருமை வாய்ந்த படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.
1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் மற்றும் 2007ல் வெளியான ‘சிவாஜி ; தி பாஸ்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமான சிவாஜி சிலை என இவையெல்லாம் இந்த மியூசியத்தில் உள்ள கவனம் ஈர்க்கும் விஷயங்களாகும்.
இந்தநிலையில் ஜூன் 7ஆம் தேதியன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மியூசியத்துக்கு வருகை தந்ததுடன், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், எம்எஸ்.குகன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், அருணா குகன் ஆகியோருடன் இணைந்து மியூசியத்தை சுற்றிப் பார்த்தார்.
அந்தவகையில் சூப்பர்ஸ்டார் ராசிக்கு அவரது நினைவுப்பாதையில் ஒரு பயணம் போல இந்த நிகழ்வு அமைந்துவிட்டது.