V4UMEDIA
HomeNewsKollywoodநகுல் நடிக்கும் புதிய படத்திற்கு திருக்குறள் வரியில் தலைப்பு

நகுல் நடிக்கும் புதிய படத்திற்கு திருக்குறள் வரியில் தலைப்பு

கடந்த 17 வருடங்களுக்கு முன்பு தமிழில் நடிகர் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமான படம் ‘கற்க கசடற’. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய இந்த படத்தின் தலைப்பு கற்க கசடற என துவங்கும் திருக்குறளின் இதில் முதல் இரண்டு வார்த்தைகளை கொண்டிருந்தது.

அதன் பிறகு ஒரு சில படங்களுக்கு இதே போன்று திருக்குறளின் ஆரம்ப வார்த்தைகள் டைட்டிலாக வைக்கப்பட்டிருந்தாலும் முதல் முறையாக ஒரு திருக்குறளின் இறுதி வார்த்தைகள் அதுவும் கற்க கசடற எனத் தொடங்கும் அதே திருக்குறளில் இறுதி வார்த்தைகளாக நிற்க அதற்குத் தக என்கிற பெயரில் ஒரு படம் உருவாகிறது.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் நகுல் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். த்ரில்லர் கலந்த புதிய கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை டி3 என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பாலாஜி இயக்குகிறார். இந்த படத்தை ஏ ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Most Popular

Recent Comments