V4UMEDIA
HomeNewsKollywoodஹீரோவான டான்சிங் ரோஸ் ; ஜோடியான ரஜினி பட நடிகை

ஹீரோவான டான்சிங் ரோஸ் ; ஜோடியான ரஜினி பட நடிகை

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படம் ஆர்யாவின் திரை உலகப்பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியதுடன் அந்த படத்தில் நடித்த பசுபதி, சந்தோஷ் பிரதாப் ஆகியோருக்கு மட்டுமல்லாமல் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கல்லரக்கல் மற்றும் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கைன் ஆகியோருக்கும ரசிகர்களிடம் மிகப்பெரிய வெளிச்சத்தை பெற்று தந்தது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் அனைவரையும் விரட்டிய சபீர் கல்லரக்கல் ‘பர்த்மார்க்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிப்பவர் தமிழ் சினிமாவில் பட்டதாரி என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மிர்னா தான். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னாவுக்கு அடுத்ததாக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ளார். மிஸ்டரி ட்ராமாவாக இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகியுள்ளது.

பிரசவம் என்பது பெண்களுக்காக உடல் வலி சார்ந்தது மட்டுமல்ல, மனரீதியான சில பிரச்சனைகளும் அவர்களுக்கு இருக்கிறது.. இதை ஒரு கணவன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை வலியப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறதாம்.

Most Popular

Recent Comments