கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்நிதி நடிப்பில் வெளியான படம் தேஜாவு. இந்த படத்தை இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கி இருந்தார். இவர் பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறியவர்.

தேஜாவு படத்தில் விறுவிறுப்பான சஸ்பென்ஸ் கலந்த திருப்பங்கள் நடைபெற்றது. ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்ற இவர் அடுத்ததாக தருணம் என்கிற படத்தை இயக்குகிறார்.

கிஷன் தாஸ் & ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் ழென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் பேசும்போது, “ஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன் என்றார்.

கிடாரி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் கொடுத்த தர்புகா சிவா ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் இசையமைக்கிறார்.