அறிமுக இயக்குனர் ஸ்டாலின் V இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஃ. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பிரஜின் நடித்துள்ளார். கதாநாயகனுக்கு இணையாக இன்னொரு போலீஸ் அதிகாரி வேடத்தில் பருத்தி வீரன் வெங்கடேஷ் நடிக்க, இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் ஸ்டாலினே நடித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் தரமணியில் உள்ள திரைப்பட நகரத்தில் இந்த படத்திற்காக சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. கதாநாயகன் பிரஜின் மற்றும் இயக்குனர் ஸ்டாலின் இருவரும் மோதும அந்த காட்சிக்காக குடிசை போன்ற ஒரு செட் அமைக்கப்பட்டு இருந்தது.
அந்த குடிசைக்குள் இருவரும் மோதிக்கொள்ளும்போது எதிர்பாராத விதமாக வில்லனின் வாயிலிருந்து சிகரெட் எகிறிப்போய் கூரையில் பட்டு கூரை தீ பிடித்து விடுவது போலவும் அதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சண்டை இடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட இருந்தன.
ஆனால் அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பம் குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாக தீயை அதிகரிக்க செய்வதற்கு பதிலாக உடனடியாக அதிக அளவில் பரவும் விதமாக தவறிப் போய் செய்து விட்டனர்.
அப்படியே விட்டால் இன்னும் கொஞ்ச நேரத்தில் குடிசை எறிந்து போய்விடும் என்பதாலும் அதன் பிறகு நாங்கள் நினைத்தபடி காட்சியை படமாக்க முடியாது என்பதாலும் உடனடியாக சுதாரித்த நடிகர் பிரஜினும் இயக்குனர் ஸ்டாலினும் ஒளிப்பதிவாளரை துரித்தப்படுத்தி தாங்கள் எடுக்க வேண்டிய காட்சிகளை கடும் வெப்பத்தையும் படுத்தாது படமாக்கினர்.
ஒரு கட்டத்தில் இந்த தீயின் நாக்குகளில் இருந்து மயிரிழையில் இருவரும் உயிர் தப்பி உள்ளனர். இந்த அனுபவம் குறித்து சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் ஸ்டாலின் V.