கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாந்தனு பாக்கியராஜ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் ராவணக்கோட்டம். இந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கியிருந்தார். இவர் சில வருடங்களுக்கு முன்பு கதிர் நடிப்பில் வெளியான மதயானை கூட்டம் என்கிற படத்தை இயக்கியவர்.

ராமநாதபுரம் கதை களத்தில் இந்த ராவணக்கோட்டம் படத்தை உருவாக்கி இருந்தார். படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில் இராவணக்கோட்டம் திரைப்படத்தின் சிறந்த டைரக்ஷனுக்காக கிரவுன் பாயிண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது விக்ரம் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.