கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இதே பெயரில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தின் டைட்டிலேயே இதற்கும் பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் பெற்றார் நடிகர் கமல்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி, பஹத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்திந ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணும் விதமாக உருவாக்கி இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

அதற்கு முன்பாக கிட்டத்தட்ட பாபநாசம் படத்திற்கு பிறகு கமலுக்கு சொல்லிக் கொள்ளும்படியான படங்களோ வெற்றிகளோ இல்லாத நிலையில் இந்த விக்ரம் திரைப்படம் அவரது திரையுலக பயணத்தில் மீண்டும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடந்த வருடம் ஜூன் மூன்றாம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த படம் கொடுத்த வெற்றியால் ஏற்கனவே பாதியில் நின்றிருந்த இந்தியன் 2 படம் தூசி தட்டப்பட்டு படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து மணிரத்னம், பா.ரஞ்சித், வினோத் என முன்னணி இயக்குனர்களின் படங்களின் கமல் தொடர்ந்து நடிக்க உள்ளார். இதற்கெல்லாம் விதை போட்டது இந்த விக்ரம் படத்தின் வெற்றிதான் என்பதை மறுக்க முடியாது.