தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஒரு போஸ்ட் மேனின் வாழ்க்கையை மையப்படுத்தி ஏதாவது படம் வந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்லலாம். அந்த குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் ஹர்காரா.

காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ என்பவர் நடித்துள்ளார். இந்த படத்தை அவரே இயக்கியும் உள்ளார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

தபால்காரர்களைக் கௌரவப்படுத்தும் வகையில் உருவாகியிருக்கும் இந்த படத்தினால் ஈர்க்கப்பட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்நாடு தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி சாருகேசி வெளியிட்டார்.

நாயகனின் வித்தியாசமான தோற்றத்துடன் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் எனும் டேக்லைனுடன், வெளியாகியிருக்கும் “ஹர்காரா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டுவதாக அமைந்துள்ளது ஃபர்ஸ்ட்லுக்.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையைச் சொல்லும் பின்னணியில் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது.