ஆர்.பி சௌத்ரி தயாரிப்பில் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன படம் கண்ணுபட போகுதய்யா. விஜயகாந்த், சிம்ரன், கரண், சிவகுமார், லட்சுமி ஆகிய நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை இயக்குனர் பாரதி கணேஷ் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டைரக்சனில் இறங்கியுள்ள பாரதி கணேஷ் தனது புதிய படத்தை இயக்க உள்ளார் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இசைஞானியின் எண்பதாவது பிறந்த நாளான இன்று இந்த படம் துவங்கப்பட்டுள்ளது

சிறுவர்களை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் சமீபத்தில் வெளியான வாரிசு படத்தில் நடித்த இயற்கை புகழ் நடிகர் ஷாம் நடிக்க உள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் கேப்டன் விஜயகாந்த் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த கண்ணுபட போகுதய்யா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய எம்.பாரதி கணேஷ் இந்த படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை எம்.எஸ்.பிரபு கவனிக்க, படத்தொகுப்பை நாகூர் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் ராதாரவி, சந்தானபாரதி, திரு குமரன் (மகாலட்சுமி பெண்கள் கல்லூரி MD), அஜய் (ஜமீலா A.K), ஆஷிகா யாஷ் (Dada) பெங்களூரு ஈஸ்வரி அம்மா, ஜாஸ்பர், மணிரத்னம், மானஸ்வி கொட்டாச்சி, விஷ்வநாதன் பிரபாகரன், ஆவடி லயன் செந்தில் அரசு, ஷிவானி ஹரிகுமார், ராக்ஸ்டார் கமலேஷ், ஆர்வன் வெற்றி இளங்கோ, முகுந்தன் மற்றும் நிஜய் என்ற திண்டுக்கல் நஷிர் ஆகியோர் நடிக்கின்றனர்.

இன்றைய 5G ஜெனேரேஷன் காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளின் மனநிலை, அறிவு, ஆற்றல் செயல்பாடுகள் மற்றும் இன்றைய சமூக சூழ்நிலைகள், வாழ்வியலின் பார்வை பற்றிய உணர்வுப்பூர்வமான கருத்தினை விளக்கும் ஒரு பதிவாக சென்னை சிட்டியில் நடக்கும் ஒரு நல்ல கதையம்சத்துடன் இந்தப்படம் தயாராகி வருகிறது.


















