அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் டைரக்சனில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
மற்றும் யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் சிறப்பம்சமே மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியிலிருந்தும் முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருப்பதாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் வழக்கமான படத்தை விட இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
குறிப்பாக அவர் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது இன்னும் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இருந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது.
வெவ்வேறு இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நடித்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா ஆகியோர் படக்குழுவினருடன் உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி கேக் வெட்டும்போது அவரது முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சியே இந்த படம் அவருக்கு எவ்வளவு திருப்திகரமாக அமைந்துள்ளது என்பதை சொல்வது போல இருக்கிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
வரும் ஆக-1௦ஆம் தேதி இந்தப்படம ரிலீஸாக உள்ளது.