தமிழ் சினிமாவில் மிக அதிக நாட்கள் ஓடிய படம் என்கிற பெருமையைப் பெற்ற படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி. கிட்டத்தட்ட 800 நாட்களுக்கு முன்னாடி ஓடிய இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தே மீண்டும் நடிப்பார் என்றும் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் பின்னர் அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை துவங்கினார் பி.வாசு கதாநாயகிகளாக பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே மற்றும் முக்கிய வேடங்களில் ராதிகா சரத்குமார், வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் மரகதமணி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ராதிகா சரத்குமார் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு நாயகன் ராகவா லாரன்ஸ் தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றை பரிசாக அளித்துள்ளாராம்.
இதையும் குறிப்பிட்டுள்ள ராதிகா, “எனக்கு முதன்முறையாக இப்படி தங்க மோதிரம் மற்றும் விலை உயர்ந்த கடிகாரம் பரிசளித்த முதல் ஹீரோ ராகவா லாரன்ஸ் தான்.. ஜென்டில்மேனான அவருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.