ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி கதாநாயகனாக, இயக்குனராக ஒரே நேரத்தில் தன்னை உருமாற்றிக் கொண்டவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவரது ஆல்பம் பாடலுக்கு என ரசிகர்கள் இருப்பது போல அவரது படங்களுக்கு என ஒரு ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது.
அந்த வகையில் இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரையும் ஈர்க்கும் விதமான கதை அம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. அப்படி தற்போது அவர் நடித்துள்ள சூப்பர் மேன் கதையும் கொண்ட படமாக உருவாகியுள்ளது வீரன் திரைப்படம்.
சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை ஏ ஆர் கே சரவன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக கேரளாவை சேர்ந்த ஆதிரா நடித்துள்ளார். தற்போது பல படங்களில் வில்லனாக இருக்கு வரும் நடிகர் வினய் ராய் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் முனீஸ்காந், காளி வெங்கட், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து நடைபெற்ற இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஹிப்ஹாப் ஆதி, “இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக் கொண்டது தான் அதிகம்” என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் சரவனை எனக்கு ‘இன்று நேற்று நாளை’ சமயத்தில் இசையமைத்திருந்த பொழுதுதான் அவர் எனக்கு அறிமுகம். இதுவரை நான் செய்திருக்கும் படங்களிலேயே இந்த படத்தில் தான் ஆக்ஷன் அதிகமாக இருக்கும். குதிரையிலே ஆக்ஷன் காட்சிகள் எல்லாம் இருக்கும். அதற்காக முறையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து அதை செயல்படுத்தினோம்.
கிட்டத்தட்ட இந்த பயணத்தில் ஆறு மாதங்கள் என்னுடனே அவரும் உடன் இருந்தார். வேலையைத் தாண்டி சிலர் மட்டும்தான் நம் வாழ்க்கையிலும் நண்பர்களாக வருவார்கள். அதில் எனக்கு சரவனும் ஒருவர். இதற்கு அடுத்தும் தொடர்ந்து வேலை செய்வோம் என்று காத்திருக்கிறேன்.இந்த படம் எடுக்கப்பட்டது மூன்று மாத காலத்தில் என்றாலும், அதற்கு முன்பு ஒரு ஆறு மாத காலம் குதிரை பயிற்சியில் ‘முடியும் முடியும்’ என்று எனக்கு உத்வேகம் கொடுத்த மாஸ்டர் அப்பு, ஜான் அவர்களுக்கு நன்றி.
‘சிங்கிள் பசங்க’, ‘கேரளா டான்ஸ்’ என என்னுடன் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்த சந்தோஷ் மாஸ்டர் தான் இதற்கும் நடனம் அமைத்திருக்கிறார். இந்த கதைக்கு அந்த மண்சார்ந்த நடன அசைவுகள் நிறைய ஒர்க் செய்து எங்களுக்கும் அதை சொல்லிக் கொடுத்தார். இந்த படத்தில் நான் நடித்ததை விட கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய இருக்கிறது” என்று கூறினார்.