V4UMEDIA
HomeNewsKollywoodபுதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் ; பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி

புதிய பாராளுமன்றத்தில் தமிழக செங்கோல் ; பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி

இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களின் மாண்பை குறிக்கும் விதமாக செங்கோல் ஒன்றை தமிழகத்திலிருந்து சென்ற ஆதினத்தை சேர்ந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைத்தனர். இன்று நடைபெற்ற பாராளுமன்ற திறப்பு விழாவில் பிரதமர் மோடி அந்த செங்கோலை சபாநாயகரின் இருக்கையில் அருகில் தன் கைப்பட பொருத்தினார்.

இப்படி இந்திய பாராளுமன்றத்தில் நம் தமிழகத்தை சேர்ந்த செங்கோல் இடம்பெற்று இருப்பது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இதற்கு தங்களது வரவேற்பையும் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி சூப்பர்ஸ்டார் ரஜினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டு, “இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல். #தமிழன்டா.. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments