கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் அருள்நிதி. இதனாலேயே அருள்நிதியின் படங்களுக்கு என ஒரு தனியாக ரசிகர் வட்டமே இருக்கிறது.
அந்த வகையில் கடந்த வருடம் தேஜாவு, டைரி போன்ற திரில்லர் படங்களில் நகரத்து பின்னணியில் நடக்கும் கதைகளில் நடித்த அருள்நிதி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து பின்னணியில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். வரும் மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் டைரக்டர்களுக்கான சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது.
படத்தை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ், “அருள்நிதி நடித்ததிலேயே பெஸ்ட் படம் என்று இதனை சொல்லலாம். அருள்நிதியை அறிமுகப்படுத்தியதில் பெருமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்
10 வருடங்களுக்கு முன்பு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் தான் அருள்நிதி கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குனர் மிஷ்கின் இந்த படத்தை பார்த்துவிட்டு கூறும்போது, “கதாநாயகனின் அறம் மனித குலத்தின் மேன்மை எதுவோ அந்தப் பக்கம் சேர்ந்தது ரொம்ப நாளைக்கு அப்புறம் அழகா ஸ்ட்ரக்சர் எல்லாம் பார்த்தேன் என்று பாராட்டியுள்ளார்.