நடிகர் ஜெய்யின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தீராத காதல். இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மலையாள நடிகை ஷிவதா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இதில் ஏற்கனவே ரோகின் வெங்கடேசன் இயக்கிய அதே கண்கள் படத்தில் நடிகை ஷிவதா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் வெளிவர இருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நடிகர் ஜெய் பேசும்போது, “இந்தப்படத்தின் கதையை, கதையாகக் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. ஆனால் எனக்கு நன்றாக இருக்குமா? என்று ஒரு குழப்பம் இருந்தது. ஆனால் எனக்கு இயக்குநர் மீது நம்பிக்கை இருந்தது. அவரது அதே கண்கள் படத்தை 4 முறை பார்த்துள்ளேன். இந்த மாதிரி இயக்குநரிடம் பணிபுரிய வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடந்தது” என்றார்.
இந்த படம் குறித்து இயக்குனர் ரோகின் வெங்கடேசன் பேசும்போது, “ஆசைப்பட்ட வாழ்க்கை, ஆசைப்பட்ட பொருள், ஆசைப்பட்ட நேரத்துல கிடைக்காம போறது தான் வாழ்க்கையோட சுவாரஸ்யம். பாலகுமாரன் சார் வார்த்தை, எல்லாருடைய வாழ்க்கைக்கும் பொருந்தும். இது என்னோட இரண்டாவது படமா வந்திருக்க வேண்டியது. சுரேந்திரன் சார் நிறையக் காதல் கதைகளை எழுதியிருக்கிறார்.
இந்தக்கதை ஒரு அற்புதம். அவரோடு நிறையச் சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் என்னோட எப்போதும் கூட நின்றிருக்கார். இது வேற ஒரு புரடக்சனுக்கு பண்ண வேண்டியது. அந்த தயாரிப்பாளர் சுதன் தான் ஐஸ்வர்யா கூட கனக்ட் பண்ணிவிட்டார். அவர் வேறு படங்கள் செய்து கொண்டிருந்த போதும் இந்தப்படம் பத்தி அவ்வப்போது பேசிக்கொண்டே இருப்பார். சுதன் இந்தப்படம் செய்யவில்லை என்ற போது தான் லைக்காவிடம் போனோம். பல அடுக்குகள் தாண்டி, இந்தப்படம் ஓகே ஆனது.
ஹீரோ எனும் போது ஜெய் ஞாபகத்திற்கு வந்தார். ஏன் ஜெய் என்றால், பார்ப்பவர்களுக்குக் கதையில் இந்தாள் இதை செய்திருப்பான் எனத் தோன்ற வேண்டும், அது அவர் முகத்தைப் பார்த்தால் மட்டுமே இருக்கும். ஷூட்டிங் செம்ம கலகலப்பாக இருக்கும். ஆனால் ஷாட்டின் போது அட்டகாசமாக நடித்து அசத்திவிடுவார்கள்.
ஜெய் வசனம் இல்லாத போது தான் மாட்டிக்கொள்வார். என்னை நடித்துக் காட்டச் சொல்வார். நான் கேவலமாக நடிப்பேன். நீங்களே நடித்து விடுங்கள் என்பேன். ஐஸ்வர்யா மேடம் எதுவானாலும் அசத்திவிடுவார், ஆனால் டயலாக்கை அவ்வப்போது மாற்றி விடுவார். ஆனால் அங்கேயே நான் மாற்றிப்பேசுங்கள் என அடம்பிடிப்பேன். மற்றபடி அவர் அட்டகாசமாகச் செய்துவிடுவார். ஷிவதா மேடம் மிக புரபஷனல். வந்தால் அவர் வேலையை சிறப்பாகச் செய்து விடுவார்” என்றார்.