விருமன் படத்தை தொடர்ந்து இயக்குனர் முத்தையா தனது எட்டாவது படமாக காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க. சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் ஜூன் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது
இதில் பேசிய நடிகர் ஆர்யா கூறும்போது முத்தையா சார் பயங்கரமான சிட்டி சப்ஜெக்டோட என்னிடம் வந்தாரு.. சார் இது வேண்டாம். ஒரு கிராமத்துப் படம் பண்ணனும். அதுவும் உங்க கூட பண்ணனும்னு சொன்னேன். அவர் இந்த கதையோடு திரும்ப வந்தாரு.
அவரோட படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். எமோஷன் எப்பவும் சூப்பரா இருக்கும். சீன் சொல்லும்போதே அழுதுருவாரு. அவர் மாதிரி என்னால நடிக்க முடியுமானு பயமா இருக்கும். நிறைய நிறையச் சம்பவங்கள் கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பாரு.
என்ன விட ஹீரோயினுக்கு டயலாக் அதிகம். அவங்களுக்கு நிறைய காட்சிகள் இருக்கு. சாதாரணமா வந்துட்டு போற ஹீரோயின் ரோல் இல்ல. சூப்பரா நடிச்சிருக்காங்க. என்னோட படங்கள்ல இந்தமாதிரி தோற்றம் பண்ணதே இல்ல உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்” என்று கூறினார்.