சமீபத்தில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இலங்கை தமிழ் மக்கள் இந்திய மண்ணில் குறிப்பாக தமிழகத்தில் அகதிகளாக வாழும் வலி நிறைந்த வாழ்க்கையை காண்பவர் மனதும் கரையும் விதமாக இந்த படம் சொல்லி இருக்கிறது.

சசிகுமார் நடித்த அயோத்தி படத்திற்கு பிறகு இது மக்களின் மனம் கவரும் ஒரு பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக மேகா ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக், கனிகா ஆகியோர் நடித்திருந்தனர்.

மற்றும் இன்னொரு கதாநாயகியாக ஜெசி என்கிற கதாபாத்திரத்தில் மதுரா என்கிற அறிமுக நடிகை நடித்திருந்தார் பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன் நடிகை போல இருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை தான்.
இந்த கதையும் கதாபாத்திரமும் இலங்கையுடன் தொடர்புடையது என்பதால் இந்த கதாபாத்திரங்களின் வலியை உணர்ந்து கதையைப் புரிந்து எளிதாக நடிக்க முடிந்தது என்கிறார் ஜெஸ்ஸி.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ‘என் முதல் நாள் படப்பிடிப்பில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. என்னை பார்த்ததும் புரிந்துகொண்டு எனக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்து பதட்டத்தை போக்கி எனக்கு ஒரு ஆசனாக விஜய்சேதுபதி இருந்தார்.
அதேபோல நடிப்பின் மீது ஆர்வம் வந்த பிறகு நடிகர் விவேக்குடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவருடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியது எனக்கு பேரானந்தம்.

படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பேசியது பழகியது அனைத்தும் இன்றும் எனக்கு ஞாபகம் வருகிறது.. எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை இருந்தது. அப்போது பியானோ அங்கிருந்தது. அதில் எனக்கு முதல்வன் படத்தில் இருந்து பாடல் (குறுக்கு சிறுத்தவளே என் குங்குமத்த) என்ற பாடலை வாசிக்க கற்று கொடுத்தார் விவேக்.

அதுமட்டுமல்ல நிறைய இளையராஜா பாடல்களை எங்களுக்கு வாசித்து காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார்.. ஆனால் அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனையை தந்தது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரத்தை இழந்து விட்டோமே” என்று. என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இவர் ஒவ்வொரு முறையும் ஜெர்மனியில் இருந்து வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.