மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றிக்கூட்டணியான லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி வெற்றி படமாக தயாராகி வருகிறது லியோ. இந்த படத்திற்கு அடுத்ததாக விஜயின் 68வது படத்தை யார் இயக்கப் போகிறார் என கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.
அதில் பல பெயர்கள் அடிபட்டாலும் சமீப நாட்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் பெயர் கொஞ்சம் அழுத்தமாகவே அடிபட்டது. அதே சமயம் சமீபத்தில் வெளியான அவரது கஸ்டடி திரைப்படம் ரசிகர்களை கவர தவறியது. அதனால் நிச்சயம் வெங்கட் பிரபு விஜய் படத்தை இயக்கம் வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வெங்கட் பிரபு தான் விஜய்யின் 68வது படத்தை இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.
வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 20 வருடம் கழித்து விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இதற்கான அறிவிப்பை ஒரு டீசர் கிளிம்ப்ஸ் ஆக வெளியிட்டுள்ளனர்.
அதில் குறுக்கெழுத்து போட்டியை பெயர்களை வட்டமிட்டு நிரப்புவது போல படத்தில் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன் ஆகியோரை ஒரு புதிய முறையில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இந்த விஜய் – வெங்கட் பிரபுவின் படமும் புதிய பாணியில் இருக்கும் என எதிர்பார்க்கலாம். மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. மங்காத்தா படத்தை தொடர்ந்து அவர் விஜய் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு அது கைகூடியுள்ளது ஆச்சரியமான விஷயம் தான்.