விஜய் சேதுபதி பொருத்தவரை புது இயக்குனர்களுக்கும் தன்னுடன் நட்பு வட்டாரத்தில் பழகியவர்களுக்கும் தன்னுடைய படங்களை இயக்கும் வாய்ப்பை ஒரு முறை அல்ல, ஒரு முறைக்கு இருமுறை கூட தரும் பழக்கம் கொண்டவர். அப்படி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஆறுமுக குமார் என்பவர் டைரக்ஷனில் விஜய் சேதுபதி மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்கிற படம் வெளியானது.
வித்தியாசமான கதைக்களத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த படம் வெளியானாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறி தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் தற்போதும் மீண்டும் இதே ஆறுமுக குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த படத்தின் துவக்க விழா பூஜை மலேசியாவில் உள்ள கோவிலில் நடைபெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகையான ருக்மணி வசந்தா என்பவர் நடிக்கிறார்.
அதுமட்டுமல்ல நடிகர் யோகி பாபு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் படங்களில் அதிக அளவு இசையமைத்து வரும் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.