V4UMEDIA
HomeNewsKollywoodஇன்ஸ்டாகிராம் முதல் பதிவு லோகேஷிடம் அனுமதி கேட்ட விஜய்

இன்ஸ்டாகிராம் முதல் பதிவு லோகேஷிடம் அனுமதி கேட்ட விஜய்

நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர். தனது ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் மாற்றி பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்ய ஊக்கப்படுத்தி வருகிறார்.

இதற்கு முன்னதாக சோசியல் மீடியாவில் ட்விட்டரில் மட்டும் கணக்கு வைத்திருந்த நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பாக முதன் முதலாக இன்ஸ்டாகிராமிலும் புதிய கணக்கை துவங்கினார்.

அப்போது இன்ஸ்டாகிராமில் முதன்முதலில் அவர் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதற்கு பல இடங்களில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் தற்போது அந்த புகைப்படம் பற்றி ஒரு புதிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

“அந்த புகைப்படம் படப்பிடிப்பின்போது படத்தில் இடம்பெறும் எந்த ஒரு காட்சியிலும் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல.. படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ஏதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதற்கு முன்பாக என்னிடம் அதை பயன்படுத்திக் கொள்ளலாமா என்று உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டார் விஜய்.

அவர் என்னை கேட்க வேண்டும் என்று கூட தேவையில்லை. ஆனால் இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும் என அவர் நினைத்தது அவருடைய பெருந்தன்மை. அதனால் தான் அவர் இந்த உயரத்தில் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments