பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானதில் இருந்தே அதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்து லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள தி ரோடு என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க தூங்கா நகரம், சிகரம் தொடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கவுரவ் நாராயணன். இவர் அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் விதமாக உருவாக இருக்கிறது.