Home News Kollywood வடிவேலு பாடிய ராசாக்கண்ணு ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது

வடிவேலு பாடிய ராசாக்கண்ணு ஃபர்ஸ்ட் சிங்கள் வெளியானது

இயக்குனர் மாரி செல்வராஜ் டைரக்ஷனில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ள படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, மலையாள நடிகர் பஹத் பாசில் இதில் வில்லனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்ல நடிகர் வடிவேலு இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 10 வருட இடைவெளியில் வெகு சில படங்களே நடித்துள்ள வடிவேலு இந்த மாமன்னன் மூலம் மீண்டும் முன்னைப்போல பிசியான நடிகராக மாறுவார் என்று படத்தின் நாயகன் உதயநிதியும் இயக்குனர் மாரி செல்வராஜும் அவ்வப்போது கூறி வருகிறார்கள்.

அதே போல படத்தின் போஸ்டர்களிலும் வடிவேலுவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னொரு ஆச்சரியமான விஷயமாக இந்த படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வடிவேலு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்கிற தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

தற்போது ராசாக்கண்ணு என்கிற அந்த பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.