பிரான்சில் தற்போது கேன்ஸ் திரைப்பட திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் இருந்து பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து ஐஸ்வர்யா ராயில் தொடங்கி நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஊர்வசி ரவுட்டேலா மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.
அது மட்டுமல்ல இசைபுயல் ஏ.ஆர் ரகுமான், நடிகர் மாதவன் ஆகியோரும் இந்த திரைப்பட திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். பொதுவாக இதுபோன்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும்போது பிரபல நடிகைகள் தங்களது ஆடை வடிவமைப்பாளர்களால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு கலந்து கொள்வது வழக்கம்.
இதில் கலந்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் கூட அலுமினியத்தால் செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான உடையை அணிந்து கொண்டு கலந்து கொண்டது பார்வையாளர்களை கவர்ந்தது.
அதேசமயம் இதே விழாவில் கலந்துகொண்ட நம்ம ஊர் குஷ்பு தமிழ் கலாச்சாரப்படி பாரம்பரியமான காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தியபடி இந்த விழாவில் கலந்து கொண்டார்.
இது விழாவில் கலந்து கொண்டவர்களை மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை உலகெங்கிலும் இருந்து பார்க்கும் தமிழர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து குஷ்புவுக்கு சோசியல் மீடியா மூலமாக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.