நடிகர் சித்தார்த்துக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. தற்போது அதை நிரப்பும் விதமாக தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடித்து வரும் படம் உங்களில் ஒன்று தான் டக்கர்.
இந்த படத்தில் சித்தார்த்துடன் யோகிபாபு, திவ்யான்ஷா, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர் இந்த படத்தைகார்த்திக் ஜி கிரிஷ் எழுதி இயக்குகிறார் சமீபத்தில் வெளியான இதன் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படம் மே 26 ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ளது