V4UMEDIA
HomeNewsKollywoodரஜினி-லோகேஷ் படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட தகவல்

ரஜினி-லோகேஷ் படம் குறித்து இயக்குனர் மிஷ்கின் வெளியிட்ட தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் அவரது 169 படமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கு அடுத்து ஜெய்பீம் புகழ் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் இன்னொரு படத்திலும் நடிக்க இருக்கிறார் என்கிற அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.

அதே சமயம் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜின் டைரக்சனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பார் என்கிற தகவல் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் குறித்தும் ஒரு பேட்டியில் மிஷ்கின் கூறிய போது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்றும் அந்த படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்று ஒரு தகவலை கூறியுள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் இப்படி வெளிப்படையாக பேசியதால் ஒருவேளை லோகேஷ் கனகராஜ் இதுபற்றி அவரிடம் படப்பிடிப்பு சமயத்தில் கூறியிருக்கலாமோ என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.

இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என ஒரு வருத்தப்படும் செய்தியை அவர் கூறியிருந்தாலும் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் ஒரு மாஸான படத்தில் நடித்துவிட்டு அவர் தனது திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெற்றால் அது மிகச்சரியாக இருக்கும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments