V4UMEDIA
HomeNewsKollywoodஜல்லிக்கட்டு தடை நீக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜி.வி பிரகாஷ்

ஜல்லிக்கட்டு தடை நீக்கம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜி.வி பிரகாஷ்

தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டுக்களில் ஒன்று ஜல்லிக்கட்டு. கடந்த சில வருடங்கள் வரை எந்தவித சிக்கலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. ஆனால் இந்தியாவுக்குள் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் அன்னிய அமைப்பான பீட்டா என்கிற தனியார் அமைப்பு ஒன்று ஜல்லிக்கட்டு என்கிற பெயரில் மிருகவதை செய்வதாக கூறி அதை தடை செய்ய வேண்டும் என கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது தொடுத்த வழக்கின் காரணமாக தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

தன் எழுச்சியாக இளைஞர்கள் நடத்திய போராட்டமும் அதன்பிறகு தமிழக அரசு நடத்திய சட்டப்போராட்டமும் காரணமாக அவ்வப்போது இந்த ஜல்லிக்கட்டுக்கான தடை தற்காலிகமாக நீக்கப்பட்டு ஒவ்வொரு முறையும் மிகுந்த போராட்டத்துடன் தான் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் இனி ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்து இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதை நடத்துவதற்கு தடை விதிக்க முடியாது என்றும் அந்த தீர்ப்பில் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகமே உற்சாகத்தில் மிதந்து வருகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இளைஞர்கள் போராட்டமாக மாறிய சமயத்தில் இதற்காக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து போராட்டத்திலும் கலந்து கொண்டவர்களில் இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷும் ஒருவர். தற்போது இப்படி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்திருப்பதை தொடர்ந்து அவர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், “6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன் , போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன்.அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

Most Popular

Recent Comments