நல்ல கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் நடிகர் அசோக் செல்வனும் ஒருவர். அப்படி அவர் நடித்து வரும் படம் போர் தொழில்/ இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார் புலனாய்வு த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது/

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும். இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும் என உறுதியாக நம்புகிறார்கள் படக்குழுவினர்