ஒரு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி தமிழ் திரை உலகில் நுழைந்த போது, தான் இயக்கிய டிஷ்யூம் என்கிற படம் மூலம் அவரை முதன்முதலாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சசி, அந்த படத்திலேயே தன் திறமையை நிரூபித்த விஜய் ஆண்டனி தொடர்ந்து பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார்,

அதன்பிறகு கதாநாயகனாக மாறி அதிலும் வெற்றிகரமாக பயணித்து வருகிறார், தற்போது உருவாகியுள்ள பிச்சைக்காரன் 2 படம் மூலமாக இயக்குனராகவும் படத்தொகுப்பாளராகவும் அடி எடுத்து வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

வரும் மே-19ல் இந்தப்படம் ரிலீசாவதை தொடர்ந்து இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சசியும் கலந்து கொண்டார். அப்போது இந்த படத்தை தான் இயக்க முடியாத சூழல் எதனால் என்பதையும் விளக்கினார்.

விஜய் ஆண்டனி பேசும்போது, ‘நான் முன்பே சொன்னதுபோல, ’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்” என்றார்.