இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தந்தை வழியில் இயக்குனர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் பாரதிராஜா அவரை தாஜ்மஹால் படம் மூலம் கதாநாயகன் ஆக்கினார். ஆனால் மனோஜ் பாரதியால் நடிப்புத்துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல நடிகன் என்கிற பெயரை பெற்று விட்டார்.

இந்த நிலையில் அவரது நீண்ட நாள் கனவான டைரக்சன் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார் மனோஜ் பாரதி. இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் தான் மனோஜ் பாரதியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அது மட்டுமல்ல அவரது தந்தை பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு மார்கழி திங்கள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தனது தந்தை பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படஹ்தில் கார்த்திக், ராதா என்கிற இளஞ்ஜோடியை அறிமுகப்படுத்தியது போல தற்போது மனோஜ் கே பாரதி இந்த மார்கழி திங்கள் படத்தில் சியாம் செல்வன் என்பவரை கதாநாயகனாகவும் ரக்சனா என்பவரை கதாநாயகியாகவும் அறிமுகப்படுத்துகிறார்.

இதற்கு நடிகர் கார்த்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் மனோஜ், ஜி.வி பிரகாஷ், சுசீந்திரன் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.