V4UMEDIA
HomeNewsKollywoodதொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்

தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்திக்கும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை சந்திக்க, இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பாலிவுட் வரை சினிமா நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டுவார்கள். சினிமா நட்சத்திரங்களையும் தாண்டி அரசியல் தலைவர்கள் கூட ரஜினிகாந்த் உடன் மிக நெருக்கமான நட்பு பாராட்ட விரும்புவார்கள்.

தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஒருமுறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெறுவதை வாடிக்கையாகவே ஆக்கிவிட்டார்கள் என தோன்றுகிறது. கடந்த வருடங்களில் சென்னை அணியை சேர்ந்தவர்களோ அல்லது சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெறும்போது இளம் வீரர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்தொ அந்த புகைப்படங்களை தங்களது சோசியல் மீடியாவில் மிகவும் பெருமையுடன் பகிர்ந்து கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேர்ந்த வீரர்களான வருண் சக்கரவர்த்தியும் வெங்கடேஷ் ஐயரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

அவர்கள் அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சந்திப்பு குறித்து கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறும்போது, ‘ஆகாயத்தில் இரவில் மில்லியன் கணக்கில் நட்சத்திரங்கள் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இந்த சூப்பர் ஸ்டார் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தோன்றக்கூடிய நட்சத்திரம். கடைசியாக அது நடந்தே விட்டது. ஒன் அன்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்” என்று தனது மகிழ்ச்சியை வார்த்தைகளாக வெளிப்படுத்தி உள்ளார்.

Most Popular

Recent Comments