கடந்த வாரம் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாடு முழுவதிலும் மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கியது. அப்பாவி இந்து பெண்கள் பலர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு வெளிநாடுகளில் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்கிற நிஜத்தில் நடந்த சம்பவத்தை வைத்து இந்த படம் உருவாகி இருந்தது.
இந்த படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கியிருந்தார். கதாநாயகியாக அதா சர்மா நடிக்க இன்னும் சில நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் இயக்குனர் சுதீப் சென்னும் அதா சர்மாவும் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக தெலங்கானாவில் உள்ள கரீம் நகருக்கு போகும் வழியில் காரில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் சிக்கினர்.
ஆனாலும் நல்ல வேலையாக தங்களுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றும் தாங்கள் நலமாக இருக்கிறோம் என்றும் ரசிகர்களுக்கு சோசியல் மீடியா மூலமாக இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தி கேரள ஸ்டோரி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவிற்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்