V4UMEDIA
HomeNewsKollywoodபிரபாஸின் சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபாஸின் சலார் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராதே ஷ்யாம் படத்தைத் தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் பிரபாஸ் நடித்து வரும் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகும் விதமாக தயாராகி வருகிறது. இதில் புராண படமாக உருவாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகிறது.

இந்த படத்துக்கு முன்பே துவங்கப்பட்ட பிரபாஸில் இன்னொரு படம் சலார். கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக மாறிய பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிரித்திவிராஜ் நடித்து உள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Most Popular

Recent Comments