கௌதம் கார்த்திக் நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளிவர துவங்கியுள்ளன. அந்த வகையில் சிம்புவுடன் இவர் இணைந்து நடித்த பத்து தல மற்றும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் உருவான 1947 ஆகஸ்ட் 16 ஆகிய படங்கள் அடுத்தடுத்து அடுத்தடுத்து வெளியாகின.
இந்த படங்களில் கௌதம் கார்த்திக்கின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அவரது முயற்சிக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நடிச்ச கிரிமினல் படம் ரிலீஸுக்கு விறுவிறுப்பாக தயாராகிறது. இதை அடுத்து இந்த படத்தை டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன .
இந்த படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் தட்சிணாமூர்த்தி இயக்கியுள்ள இந்த படம் இந்த மதுரையை பின்னணியாக கொண்டு தீவிரமான க்ரைம் திரில்லர் கதையாக உருவாகி உள்ளது.
இதில் சரத்குமார் காவல்துறை அதிகாரியாகவும் கௌதம் கார்த்திக் அக்யூஸ்ட் ஆகவும் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் ஜனனி, தீப்தி, ரவீணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்..