கிராமத்து பின்னணியில், அங்குள்ள மக்களின் வாழ்வியல் கதைகளை மட்டுமே தொடர்ந்து படமாக்கி வருபவர் இயக்குனர் முத்தையா. அவர் சாதிரீதியாக படம் எடுக்கிறார் என்று சிலர் சொன்னாலும், எந்த ஒரு சாதியையும் எதிர்க்கும் விதமாக படம் எடுக்காமல் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குள்ளேயே, அவர்கள் உறவுகளுக்குள்ளேயே நடக்கும் மோதல்களை மட்டுமே படமாக்கி வருகிறார்.

இந்த நிலையில் விருமன் படத்தை தொடர்ந்து ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கி வந்தார். கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இத்னானி நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் கடைபிடித்து முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன.
இந்த நிலையில் வரும் ஜூன் இரண்டாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.