இதற்கு முன்பு இந்தியாவில், குறிப்பாக தமிழில் ராமாயணம் தொடர்பாக பல டிவி தொடர்களும் பல திரைப்படங்களும் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்கிற படம் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது. ஓம் ஓம்ராவத் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸும் சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் நடித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு ராமாயணம் டிவி தொடராக வெளியானபோது அதில் சீதாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை தீபிகா. அந்த தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் அனைவருமே அவரை சீதாவாகவே பார்க்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு அவருக்கு அந்த தொடர் பெயர் பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் சீதாவாக நடித்துள்ள கீர்த்தி சனோன் இந்த படத்தில் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறும்போது, “சீதையாக இந்த படத்தில் நடிக்க என்னை தேர்வு செய்ததற்கு நன்றி. சிலருக்கு மட்டும்தான் வாழ்நாளில் இப்படி ஒரு வேடம் அமையும்.

அந்தவகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இந்த படத்தில் ராமராக நடித்துள்ள பிரபாஸ் நிஜத்திலும் ராமரை போன்ற எளிமையான மனிதர்” என்று தனது மகிழ்ச்சியையும் பிரபாஸ் குறித்த கருத்துக்களையும் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார்.