பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸ் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராக மாறிவிட்டார். ஆனால் அதன்பிறகு கடந்த 6 வருடங்களுக்குள் அவர் நடித்த இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. அதில் ஆக்சன் படமாக உருவான சாகோ மற்றும் ரொமாண்டிக் படமாக உருவான ராதே ஷ்யாம் ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்களை திருப்திப்படுத்த தவறின.
இந்த நிலையில் தற்போது ஒரே சமயத்தில் மூன்று நான்கு படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். அதில் அடுத்ததாக அவர்கள் நடிக்கும் வெளியாக இருக்கும் படம் ஆதிஒபுருஷ். ராமாயணத்தை மையமாக வைத்து லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் உருவாகி உள்ள இந்த படத்தை இயக்குனர் ஓம் ராவத் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக கீர்த்தி சனான் நடிக்க, வில்லனாக ராவணன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் வகையில் தயாராகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. ராமாயணத்தை ஒரு புதிய வடிவில் பார்க்கலாம் என்பதற்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக இந்த டிரைலர் அமைந்துள்ளது.