Home News Kollywood 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவன் படத்தில் மீரா ஜாஸ்மின்

19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவன் படத்தில் மீரா ஜாஸ்மின்

கடந்த 2002ல் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீரா ஜாஸ்மின். இடையில் தனது திரையுலக பயணத்திற்கு ஒரு சிறிய இடைவெளி விட்டிருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக மாறி இயக்கிவரும் டெஸ்ட் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளார் மீரா ஜாஸ்மின். இந்த படத்தில் கதாநாயகர்களாக மாதவன், சித்தார்த் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து மீண்டும் மாதவனுடன் இணைந்து நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்.