சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தான் நடித்துவரும் ஜெயிலர் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார். இதை தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால்சலாம் படத்தின் படப்பிடிப்பில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோல் என்கிற அளவிலேயே நடிக்கிறார் என்பதும் படத்தில் கதாநாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் நடிக்கிறார்கள் என்பதும் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
அதேசமயம் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த ஒரு விஷயம் அவரது பெருந்தன்மையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் எங்கேயும் இடம் பெறவே இல்லை.
விஷ்ணு விஷால் விக்ராந்த் இருவரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயர் இடம் பெறாமல் ஒரு போஸ்டர் வெளியாவது இதுவே முதல் முறை.
இந்த படத்தில் தான் கதாநாயகன் இல்லை என்பதால் தனது பெயரை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிவிட்டதாலேயே அவரது பெயர் இடம் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.