நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த படத்தில் தனது காட்சிகளில் அனைத்திலும் நடித்து முடித்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக தனது மகள் ஐஸ்வர்யா தற்போது இயக்கி வரும் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சொல்லப்பட்டது. இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படிப்பில் கலந்து கொள்வதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை கிளம்பி சென்றார். இதுகுறித்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற இஸ்லாமிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் இவரது தோற்றமே பார்ப்பதற்கு படு கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இந்த போஸ்டரை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான லைக்கா, “ஒவ்வொருவரின் அன்பிற்குரிய பாய் மீண்டும் மும்பைக்கு திரும்பியுள்ளார். மொய்தீன் பாய் ஆட்டம் இனி ஆரம்பம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.