சிவகார்த்திகேயனின் திரையுலக பயணத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அதைத்தொடர்ந்து அடுத்து வெளியான ரஜினி முருகன் படமும் சிவகார்த்திகேயனை கமர்சியல் ஹீரோவாக மாற்றியது.

இந்த இரண்டு படங்களையும் இயக்கி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஏற்றத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய சீமராஜா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய டிஎஸ்பி ஆகிய படங்கள் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் பொன்ராம் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக பிக்பாஸ் புகழ் அசின் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஐந்து ஆறு சீசன்களாக கலந்துகொண்டவர்களின் பல பேர் கதாநாயகனாக மாறி பெரிய உயர்வு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆரவ் தர்ஷன் முகேன் ராவ் ஆகியோர்கள் கூட வெள்ளித்திரையில் கதாநாயகனாக மாறினார்கள் அந்த வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வின்னரான அசீமும் வெள்ளித்திரையில் கதாநாயகனாக மாறியுள்ளார்.

இந்த படம் ராஜஸ்தான் பின்னணியில் உருவாக இருக்கும் கதை என்பதால் தற்போது இயக்குனர் பொன்ராமுடன் அசீமும் சேர்ந்து ராஜஸ்தான் பகுதியில் லொகேஷன் பார்த்து சென்றுள்ளாராம்.

இவர்கள் இருவரும் இணைந்து ராஜஸ்தானில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது















