V4UMEDIA
HomeNewsKollywoodபர்ஹானா படத்தை இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கியது ஏன் ? ; நெல்சன் வெங்கடேசன் விளக்கம்

பர்ஹானா படத்தை இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கியது ஏன் ? ; நெல்சன் வெங்கடேசன் விளக்கம்

ஒரு நாள் கூத்து, எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெற்றி பெற்ற மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். இந்த இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக அவர் தற்போது இயக்கியுள்ள படம் பர்ஹானா. ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள இந்த படம் வரும் மே 12ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஒருநாள் கூத்து படம் மூலம் மிகப்பெரிய வெளிச்சம் பெற்ற ஜஸ்டின் பிரபாகரன் தான் இந்த படத்திற்கும் இசையமைத்து உள்ளார். இந்த படம் இஸ்லாமிய பின்னணியில் உருவாவதற்கு காரணம் என்ன என்று சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “ஃபர்ஹானா திரைப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3வது படம் மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சென்னை புதுபேட்டையில் வளர்ந்தவன். வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருக்கும் தெருவில் தான் வீடு. அங்கு இஸ்லாமியர்கள் அதிகம். புதுபேட்டை, திருவல்லிக்கேணி என்று நான் பிரியாணி சாப்பிட்டு வளர்ந்தது எல்லாமே முஸ்லீம் நண்பர்கள் நடுவில் தான்.

ஆகையால், நான் எடுக்கக் கூடிய படத்தின் பின்னணி, நான் வளர்ந்த.. அனுபவித்த கதையாக ஏன் இருக்க கூடாது? என்று நினைத்தேன். மதம் சார்ந்து படம் எடுக்கிறேன் என்று சர்ச்சை எழுந்துள்ளது. என்னுடைய நண்பர்களைப் பற்றி தான் எடுத்திருக்கிறேன். மதம் சார்ந்தது அல்ல.. மனம் சார்ந்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

Most Popular

Recent Comments