V4UMEDIA
HomeNewsKollywoodவணங்கான் படத்திலிருந்து வெளியேறியது ஏன் ? ; மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி

வணங்கான் படத்திலிருந்து வெளியேறியது ஏன் ? ; மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி

தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் விஜய்சேதுபதியின் மகளாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் அடுத்ததாக லிங்குசாமி டைரக்ஷனில் வெளியான வாரியர் திரைப்படத்தில் கமான் பேபி என்கிற புல்லட் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கிறங்கடித்தார்.

இதை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி ஷெட்டி. சில காரணங்களால் சூர்யா அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். இந்த நிலையில் அந்த படத்தில் தானும் விலகிக்கொண்டதாக கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி .

அவரது முதல் தமிழ் படமாக வணங்கான் படம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது அவரது விலகியதால் ஜெயம் ரவியுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் அவருக்கு தமிழில் அறிமுக படமாக இருக்கும் என்று சொல்லப்பட்டது.

அதே சமயம் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் கீர்த்தி ஷெட்டிக்கு முதல் தமிழ் அறிமுக படமாக அமையப் போகிறது என்பது ஆச்சரியம். வரும் மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கீர்த்தி ஷெட்டி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் வணங்கான் படத்திலிருந்து தான் வெளியேறியது குறித்து அவர் கூறும்போது, “நடிகர் சூர்யா கதையில் தனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மட்டுமே அந்த படத்தில் இருந்து விலகினார். மற்றபடி இயக்குனருக்கும் அவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.

நான் கூட அந்த படத்தில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம் படத்தின் தயாரிப்பு காலம் நீடித்துக்கொண்டே செல்வதால் என்னால் அந்த படத்திற்கு கால்சீட் ஒதுக்கி நடிக்க முடியவில்லை என்பதுதான். மற்றபடி வேறு எந்த பிரச்சினையும் இல்லை” என்று கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி

Most Popular

Recent Comments