V4UMEDIA
HomeNewsKollywoodபத்து வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த பரிசு

பத்து வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த பரிசு

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படப்பிடிப்புகள் ஆந்திராவில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட்டு வந்தன. இதனால் ஒரு பக்கம் தயாரிப்பு செலவுகள் அதிகரித்தவுடன் இங்கே உள்ளூரில் உள்ள தொழிலாளிகளுக்கு வேலை வாய்ப்பும் குறைந்தது. அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் காட்டப்படும் அரசுக்கு சொந்தமான இடங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு தான் படமாக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக கடந்த 10 வருடங்களில் அதாவது அதிமுக ஆட்சியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பூங்காக்கள், நினைவிடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து இதை ஒரு கோரிக்கையாகவே அரசுக்கு வைத்தனர். இந்த நிலையில் தற்போது அரசுக்கு சொந்தமான இடங்களில் முறையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தலாம் என ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Most Popular

Recent Comments